நல்லூர் ஆலயத்தையும் இடிக்க வேண்டும் தையிட்டி பதற்றத்திற்கு மத்தியில் அர்ச்சுனா MP

நேற்றைய தினம், யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், தையிட்டி விகாரையை இடிப்பதற்கு முன்னர் நல்லூர் ஆலயத்தையும், யாழ். கத்தோலிக்க தேவாலயத்தை உடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளமை, தற்போது உள்ள நிலைமையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அர்ச்சுனா, நல்லூர் கோயில் கர்ப்ப கிரகத்தில் முஸ்லிம் சமாதி உள்ளது, அதையும் உடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், “முன்னதாக நல்லூர் ஆலயம் கிட்டு பூங்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் அமைந்திருந்தது.தற்போது ஒல்லாந்தர் கோட்டை அமைக்கப்பெற்றது நல்லூர் ஆலயத்தின் கற்களை கொண்டே, அவ்வாறென்றால் முதலில் அந்த கோட்டையை உடைக்க வேண்டும். பின்னர், கத்தோலிக்க தேவாலயத்தை உடைக்க வேண்டும்.

அதன் பின்னரே தையிட்டி பற்றி கதைக்க வேண்டும். யாரோ கூறிய கட்டளைக்கிணங்க இந்த போராட்டம் இடம்பெருகிறது. இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய எவரும் முன்வரவில்லை. இவர்கள் வாக்குகளுக்காக இவ்வாறு செய்கின்றனர்” என கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply