வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றதாக, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பகுதியில் 11 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்ட தங்க நெக்லஸுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த நபரை விசாரணைக்குட்படுத்தியபோது, சொத்துக்களை அப்புறப்படுத்தியதற்காகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விசாரணைக்கமைய பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 62 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 03 திருடப்பட்ட கைக்கடிகாரங்கள், ஒரு ஜோடி தங்க காதணிகள் மற்றும் 02 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் 02 வாசனை திரவிய போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆண் சந்தேக நபர்கள் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், பெண் சந்தேக நபர் 29 வயதுடையவர் எனவும், அவர்கள் நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply