கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்: பெண் படுகொலை

நேற்று (28) பகல் பிபில, ரதலியத்த பிரதேசத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரும் தனது கழுத்தை வெட்டிக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 40 வயதுடைய ரதலியத்த, பிபில பிரதேசத்தைச் சேர்ந்த வசிப்பிடயாளர் ஆவார்.

உயிரிழந்த பெண்மணிக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக, தற்போது மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்தேகநபரும் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply