ஹட்டன் பொலிஸ் விடுதியில் பயங்கரம்: வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்தது
ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பணியை இடைநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில், பொலிஸ் விடுதியில் தங்கியிருந்த இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், ஒரு உத்தியோகத்தர் மற்றவரைத் தங்கியிருந்த இடத்திலேயே கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply