களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி

களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான பந்துல பிரசன்ன என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply