2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மாத்தளை மாவட்டத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மாத்தளை மாவட்டத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சாசனரக்ஷ சபையின் பிரதம பதிவாளர் முகுனுவெல அனுருத்த தேரர் தெரிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே முகுனுவெல அனுருத்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
முகுனுவெல அனுருத்த தேரர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாண்டுக்கான அரச வெசாக் நிகழ்வு மாத்தளை, கம்புருபிட்டிய, திஹகொட மிதெல்லவல விகாரையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் முகுனுவெல அனுருத்த தேரர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply