8 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 44,000 ரூபா பணம் என்பன பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமேஜ நிலந்தவுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் சுதாரக தேவப்பிரிய பீரிஸ் என்பவரின் மைத்துனர் இவரென்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் போதைப்பொருட்களை இலங்கைக்குள் விநியோகிக்கும் பணியை இச்சந்தேகநபர் முன்னெடுத்து வந்துள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply