கடலில் நேரடி மோதல் ஆரம்பம்- ஈரான் படைகள் அமெரிக்க சிப்பாய்கள் மீது தாக்குதல்
அடுத்தடுத்து வீழ்ந்த அமெரிக்க விமானங்களில் இருந்த பைலட்டுகளை (விமானிகளை) காப்பாற்ற அமெரிக்கப் படைகள் செம கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. ஒரு பைலட் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமெரிக்கப் படைகள் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளன. அங்கே ஏற்கனவே ஈரானியப் படைகளும் அந்த பைலட்டைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், நடுக்கடலில் வைத்து இரு தரப்புக்கும் இடையே நேரடி மோதல் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ‘ஹவாக்’ ரக அட்டாக் ஹெலிகாப்டர்கள் இரண்டு அந்தப் பகுதிக்குச் சென்றபோது, கடற்கரையில் நின்றிருந்த ஈரான் துருப்புகள் அமெரிக்க ஹெலிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதனை அடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுவே ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடந்த முதல் நேரடி மோதலாகும்.
“இன்னும் 48 மணி நேரத்தில் ஈரான் தனது ஜலசந்தியைத் திறக்கவில்லை என்றால் குண்டு மழை பொழியும்” என்று ட்ரம்ப் விடுத்த அறிவிப்புக்கு எதிராக ஈரான் பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. “ராணுவத்தை அனுப்பினாலோ அல்லது அட்டாக் பண்ண நினைத்தாலோ இந்த இடமே தீப்பிழம்பாக மாறும்” என்றும், அண்டைய நாடுகள் மீது ஈரான் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த மேட்டரில் அமெரிக்கா வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். “ஏழே நாட்களில் அனைத்தையும் முடித்து ஈரானை பணிய வைத்துவிடலாம்” என்று ட்ரம்ப் போட்ட கணக்கு எவ்வளவு பெரிய தப்பு என்பது தற்போது அவருக்குப் புரிந்திருக்கும். இதெல்லாம் இஸ்ரேல் போட்ட ஸ்கெட்ச்; இதில் அமெரிக்காவை இஸ்ரேல் கோத்துவிட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதிபர் மதுரோவைக் கைது செய்த வேகத்தில் தலைகால் புரியாமல் ஆடிய ட்ரம்ப், அப்படியே ஈரானையும் பிடித்துவிடலாம் என்று கனவு கண்டு, இன்று தலையில் துண்டைப் போட்டு உட்காரும் நிலையில் உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply