கள் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியில் கள் இறக்கிய புகாரில் விசாரிக்கச் சென்ற போது போலீசாரை தாக்கியதாக மணிகண்டன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில், 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்றிரவு போராட்டம் நடத்திய நிலையில், எஸ்.ஐ இசக்கி ராஜா உள்பட மூவர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஆலங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சேட்.
இவரது மகன் மணிகண்டன் (வயது 32). விவசாயியான இவர் பனையேறும் தொழிலானியாகவும் உள்ளார். ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை செய்வதாக ரகசிய புகார் வந்தது. அதன்பேரில் எஸ்.ஐ இசக்கி ராஜா மற்றும் 2 போலீசார் மருதம்புத்தூர் காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு பனைமரத்தில் பதநீர் எடுப்பதற்காக பானை வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த போலீசார், மரத்தின் உரிமையாளரான மணிகண்டனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், மணிகண்டன், அவரது தந்தை ஆகியோரை அழைத்து கொண்டு பனைமரம் இருக்கும் பகுதிக்கு சென்றனர். இதை பார்த்த அவர்களின் உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply