இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு பிறகு ஈரான் மின் நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒப்புக் கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க அவற்றை சுற்றி மனித சங்கலி அமைக்குமாறு ஈரான் அதிகாரிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும், போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த 10 நாள் கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, முதலில் 45 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள இருதரப்புக்கும் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான், எகிப்து, துருக்கி நாடுகள் புதிய பரிந்துரையை வழங்கினர்.
இதற்கு ஈரான் சம்மதிக்கவில்லை. நிரந்தர போர் நிறுத்தம் செய்ய வேண்டும், எதிர்காலத்திலும் அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தாது என உத்தரவாதம் அளிக்க வேண்டுமென பதிலளித்தது. இந்நிலையில், டிரம்பின் 10 நாள் கெடு முடிந்த நிலையில், அவர் பேசிய 59 வினாடி வீடியோ வெள்ளை மாளிகையின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் டிரம்ப், ‘‘இது மிக முக்கியமான காலகட்டம். அவர்களுக்கு நாளை (இன்று) காலை 8 மணி வரை (இந்திய நேரப்படி காலை 5.30 மணி) உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply