லொறி பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்து: இருவர் சம்பவ இடத்திலேயே பலி

வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.00 மணி முதல் 2.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கட்டுப்பொத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகம, பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 63 மற்றும் 42 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த லொறி ஆனமடுவ பகுதியிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கட்டுப்பொத்த பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுப்பொத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply