ரோஹிங்கியா, வங்கதேசத்தினர் சென்ற படகு மூழ்கியதில் 250 பேர் மாயம்: அந்தமான் கடலில் பரிதாபம்

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 250 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தின் கொடியுடன் கூடிய படகு ஒன்று மலேசியா நோக்கி சென்றுகொண்டு இருந்தது. இந்த படகில் மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 250 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதிக பாரம் காரணமாக அந்த படகு அந்தமான் கடலில் கவிழ்ந்ததாக தெரிகின்றது.

படகு எப்போது கவிழ்ந்தது என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை. இதனிடையே வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இருந்து இந்தோனேஷியாவுக்கு சென்று கொண்டு இருந்த மேக்னா பிரைட் என்ற படகில் இருந்தவர்கள் கடலில் மூழ்கிய படகினால் கடலில் தத்தளித்துக்கொண்டுஇருந்த 9 பேரை மீட்டுள்ளது. ரோஹிங்கிய அகதிகள் 3 பேர், ஆறு வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கிய மற்றவர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply