பாகிஸ்தானுக்கு கூடுதலாக ரூ.28ஆயிரம் கோடி நிதி உதவி: சவுதி அரேபியா உறுதி

சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு கூடுதலாக ரூ.28ஆயிரம் கோடி நிதியுதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பாகிஸ்தான் இந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ரூ. 32,679 கோடியை செலுத்துவதற்கு தயாராகி வருகின்றது. மேலும் அதன் அந்நிய செலாவணி கையிருப்பின் மீது அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கூடுதலாக ரூ.28ஆயிரம் கோடி நிதியுதவியாக வழங்குவதற்கு சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது.

மேலும் ஏற்கனவே உள்ள ரூ.46,690கோடி கடன் வசதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது அவுரங்க சீப், பாகிஸ்தானின் வெளிநாட்டு நிதித் தேவைகளுக்கு ஒரு முக்கியமான நேரத்தில் சவுதி அரேபியாவின் இந்த புதிய ஆதரவு வந்துள்ளது. இது அந்நிய செலாவணிக் கையிருப்பை அதிகரிக்கவும், வெளிநாட்டுக் கணக்கை வலுப்படுத்தவும் உதவும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply