ஈரான் தவறான முடிவை எடுத்தால் மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

அமெரிக்கா பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் ஈரானுடனான தற்போதைய போர் சூழலில் அந்நாட்டுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது குறித்து ஈரான் தலைவர்கள் புத்திசாலித்தனமாக தீர்மானிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் 28ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கினர். ஒரு மாத காலத்துக்கு பின்னர் இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. இஸ்லாமாபாத்தில் முதல் சுற்று பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்கா பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், ஈரான் தவறான முடிவை எடுத்தால் அந்த நாட்டின் மின்சாரம் எரிசக்தி மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்பு மீது குண்டுகள் வீசப்படும் என்றும் கடல்வழி முற்றுகை தீவிரப்படுத்தப்படும் என்றும் செயலர் எச்சரித்துள்ளார். மேலும் அமெரிக்கா ராணுவம் தாக்குதலுக்கு முழு தயார் நிலையில் இருப்பதாகவும் அதிபரின் உத்தரவு கிடைத்தால் தாக்குதலை தொடங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய நாட்களில் ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து பேசிய பீட் ஹெக்செத் இதுவரை 7000க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply