அணுசக்தி தொர்பாக விரைவில் ஈரான் அமெரிக்கா நாடுகளிடையே ஒப்பந்தம் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்

விரைவில் ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தங்களிடம் கையிருப்பில் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ஒப்படைக்க ஈரான் ஒப்பு கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியான சூழல் மீண்டும் திரும்ப தாங்கள் விதித்துள்ள பெரும்பாலான நிபந்தனைகளை ஈரான் ஏற்று கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறி இருக்கிறது. பல வாரங்களாக நிலவி வந்த பதட்டமான போர் சூழல் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் மூலம் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு “மிக அருகில்” இருப்பதாகவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட பாகிஸ்தானுக்குச் செல்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளும் மேலதிகப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்து வரும் நிலையில், தெஹ்ரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைக்க ஒப்பு கொண்டுள்ளதாகவும் கூறினார். லாஸ் வேகாஸ் பயணத்திற்காகத் தனது ஹெலிகாப்டரில் ஏற சென்ற போது செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் இந்த தகவலை கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply