சொந்த நாட்டு அதிபரையே பயம்மில்லாமல் எதிர்க்கும் போப் லியோ
கேமரூன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தை போப் லியோ, உலக தலைவர்கள் மற்றும் போர்சூழல் குறித்து முன்வைத்துள்ள மிக கடுமையான விமர்சனங்கள் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .
போர்களுக்காக மில்லியன் கணக்கான டாலர்களை செலவிடும் தலைவர்களைச் சாடியவர் உலகம் சில கொடும்கோலர்களால் சீரழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அழிப்பதற்கு குறைத்த காலங்களே போதும் ஆனால் கட்டியெழுப்ப ஒரு வாழ்நாள் போதாது என்பதை போரை முன்னெடுப்பவர்கள் உணர வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் போப் லியோ ஆகியோர்களுக்கு இடையே ஏற்கனவே கருத்து மோதல்கள் இருந்த நிலையில் தற்போது போப்பின் பேச்சு டிரம்ப் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையேயான ராணுவ நடவெடிக்கைகளை போப் தொடர்ந்து விமர்சித்துவருகிறார.ஈரானுக்கு எதிராக டிரம்ப் ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்ற எச்சரித்தற்கு போப் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்,இதற்கு பதிலடியாக போப் அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று டிரம்ப் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.



Leave a Reply