லெபனான் -இஸ்ரேல் போர் நிறுத்தம் எதிரொலி ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறப்பு: அனைத்து வணிக கப்பல்களும் செல்லலாம், ஈரான் அரசு அறிவிப்பு

கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் தொடங்கியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில் ஈரான் , அமெரிக்கா இடையே இரண்டு வார காலத்துக்கு போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. கடந்த 7ம் தேதி முதல் இந்த போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி்யது.

இதன் காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணமாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் 10 நா்ள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். போர் நிறுத்தம் நீடிக்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து வணிக கப்பல்களுக்காக முழுமையாக திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில், ‘‘இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் செல்வதற்கான பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply