டிரம்ப்புடன் பேச எனக்கு விரும்பமில்லை: போப் லியோ அறிவிப்பு
ஈரானில் நடக்கும் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கத்தோலிக்க மதத்தலைவர் போப் லியோ கடுமையாக விமர்சனம் செய்தார். பதிலுக்கு டிரம்ப்பும் கார்ட்டூன் மூலம் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் கேமரூனில் இருந்து அங்கோலா சென்ற போப் லியோ கூறுகையில்,’ ஈரானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக டிரம்புடன் விவாதிப்பதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை.
ஆனால் அமைதிப் பிரசங்கத்தைத் தொடர்வேன். எனது பிரசங்கம் டிரம்பை நோக்கியது அல்ல . மாறாக அமைதிக்கான பரந்த நற்செய்திச் செய்தியைப் பிரதிபலிக்கிறது. அமெரிக்க அதிபர் என்னைப் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்ததும் உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாகத்தான்’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply