கனடாவில் சீக்கிய முதியவர் மீது தாக்குதல்
கனடாவில் சீக்கிய முதியவர் மீது இளைஞர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கனடாவின் ஒன்டாரியோவின் உட்ஸ்டாக் நகரில் கடந்த 22ம் தேதி சீக்கிய முதியவர் ஒருவர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்ததாக தெரிகின்றது. அப்போது அவரது அருகில் வந்த இளைஞர் ஒருவர், அவரை தள்ளிவிட்டுள்ளார். அவரது இன அடையாளத்தை அடிப்படையாக கொண்டு அவரை இனவெறி சார்ந்த கருத்துக்களையும் ஆபாச வார்த்தைகளையும் பேசியுள்ளார். அவரை என் நாட்டை விட்டு வெளியேறு என்றும் கூச்சலிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உலக சீக்கிய அமைப்பு இந்த சம்பவம் குறித்து தீவிர கவலை தெரிவித்துள்ளதோடு இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply