எப்ஸ்டீனின் நண்பரை தூதராக நியமித்த விவகாரம் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மருக்கு கடும் எதிர்ப்பு

அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக ஜெப்ரின் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்புடைய பல நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

எப்ஸ்டீனுடன் தொடர்புடைய அமெரிக்காவுக்கான பிரிட்டிஷ் தூதர் பீட்டர் மாண்டல்சன் அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 2025-ல் அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்பட்டார். இதன் பின் பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் எப்ஸ்டீனின் நண்பரான மாண்டல்சன்னுக்கு முக்கிய தூதரகப் பதவி எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம், ஸ்டார்மரின் முன்னாள் தலைமை அதிகாரி மோர்கன் மேக்ஸ்வீனி ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அமெரிக்காவுக்கான தூதராக பீட்டர் மாண்டல்சனை நியமித்த விவகாரத்தில் கெய்ர் ஸ்டார்மர் மீது எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் தவறான முடிவு எடுத்ததற்காக ஸ்டார்மரை நாடாளுமன்ற தரகட்டுப்பாட்டு கண்காணிப்பு அமைப்பு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து எம்பிக்கள் விரைவில் வாக்களிக்க உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply