காவல்துறை உத்தியோகத்தர்களின் வினைத்திறன் காரணமாக பயங்கரவாதப் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்தது: கோதபாய

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை உத்தியோகத்தர்களின் வினைத்திறன் காரணமாக பயங்கரவாதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காவல்துறை உத்தியோகத்தர்களின் செயற்திறன் காரணமாக, தெற்கில் இடம்பெற்ற பல்வேறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்த வாய்ப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜானக பெரேரா மீதான தாக்குதல், தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு, ஹில்டன் ஹோட்டலுக்கு அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பு போன்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை சரியான முறையில் நடாத்த முடிந்ததென அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை தெனிப்பொருளாகக் கொண்டு நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது கோதபாய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பங்களை காவல்துறையினர் பயன்படுத்த வேண்டுமனெ அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகின்றதா என்பதனை காவல்துறையினரும், சட்ட மா அதிபர் திணைக்களமும் உறுதி செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply