பதவி இறக்கப்பட்ட பொட்டு அம்மான் இடத்துக்கு ரட்னம் மாஸ்ரர் நியமனம்

  கடந்தாண்டு புலிகளின் மாவீரர் தினத்திற்கு சில வாரங்களுக்கு முன் அநுராதபுர விமானப்படை முகாம் தாக்குதலுக்கு உள்ளானது. அதை பொட்டு அம்மானின் தலைமையில் உளவுப்பிரிவு நிகழ்த்திய தாக்குதல் என்றே ஊடகங்களில் ஊகங்கள் வெளியாகின. ஆனால் அநுராதபுர விமானப்படை முகாம் தாக்குதலின் சூத்திரதாரி ‘ரட்னம் மாஸ்ரர்’ என அரச உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இவர் பிரபாகரனின் தற்பாதுகாப்பு பிரிவு, புலிகளின் சிறப்புப்பிரிவான ராதா படையணி மற்றும் புலிகளின் விமானப் படையணி என்பவற்றுக்கு பொறுப்பாளராக இருப்பவர். அநுராதபுர விமானப்படை முகாம் தாக்குதல் சம்பவத்தின் முன் பிரபாகரனால் பொட்டு அம்மான் பதவி இறக்கப்பட்டு அவரது இடத்திற்கு ரட்னம் மாஸ்ரர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பின் ‘தண்டனை மாற்றலாக’ பொட்டு அம்மான் முகமாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அங்கு மூன்று மாதங்கள் கழித்தபின் மீண்டும் கிளிநொச்சிக்கு மீள அழைக்கப்பட்டதாகவும் அரச உளவுத்துறை மேலும் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply