சிவனுக்காக ஏற்றப்படும் ஒளி ஐக்கியத்தை ஏற்படுத்தட்டும் : ஜனாதிபதி
சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்காக ஏற்றிவைக்கப்படும் ஒவ்வொரு ஒளிவிளக்கும் அறியாமை இருளை அகற்றி பலமான ஐக்கியத்துக்கான ஒளியைக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள மகா சிவராத்திரிதின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீமைகள் நீங்கி நன்மைகள் விளையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சிவபெருமானை கெளரவிப்பதற்காக இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இலங்கை வாழ் இந்து மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சுதந்திர இலங்கையில் நல்லொழுக்கமுள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எம் எல்லோரினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும். விரதம் அனுஷ்டித்தல், கோயிலில் இரவில் விழித்திருத்தல், பக்திப் பாடல் கள் போன்ற நற்கிரியைகளில் ஈடுபட்டு சிறந்ததோர் சமூகத்திற்காக இந்து மக் கள் செய்யும் பிரார்த்தனைகள் எமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற பெரி தும் உதவும் என்பது எனது நம்பிக்கை யாகும்.
இன மற்றும் சமயக் குழுமங்களிடையே காணப்படும் அவநம்பிக்கையைப் போக்குவதற்கு சமய விழுமியங்கள் மிகவும் முக்கியமானவையாகும். எனவே சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்பும் வகையில் மக்கள் மத்தியில் ஒழுக்க விழுமியங்களை ஏற்படுத்தவேண்டிய மிகப் பெரும் பொறுப்பை சமயங்கள் கொண்டுள்ளன.
இன்றைய இப்புனித தினத்தில் சிவபெருமானுக்காக ஏற்றிவைக்கப்படும் ஒவ்வொரு ஒளிவிளக்கும் அறியாமை இருளகற்றி எமது எல்லா மக்கள் மத்தியிலும் பலமான ஐக்கியத்திற்கான ஒளியைக் கொண்டுவரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply