பிராங்க்பேட் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : 2 அமெரிக்க விமானப்படை வீரர்கள் பலி
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த ஒரு மர்ம மனிதன் சரமாரியாக சுட்டதில் இரண்டு அமெரிக்க விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் மாகாணத்தில் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அமெரிக்க ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்ட ராணுவ பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல் முன்பு வந்து நின்றது.
அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒரு மர்ம மனிதன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பஸ்ஸை நோக்கிய சரமாரியாக சுட்டான் இதில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாயினர். சம்பவம் அறிந்த ஜெர்மன் பாதுகாப்புப்படையினர் அந்த மர்ம மனிதனை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர் கொசோவா நாட்டைச் சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது. அவன் பயங்கரவாதியா , துப்பாக்கியுடன் எப்படி விமான நிலையத்திற்கு புகுந்தான் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கன்சலர் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply