புலம்பெயர் தமிழர்களில் சிலர் சுய லாப நோக்கில் செயற்படுகின்றனர் : ஜனாதிபதி
புலம்பெயர் தமிழர்களில் சிலர் சுயலாப நோக்கில் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தமிழ் மொழியில் சரியாகப் பேசத் தெரியாத, வவுனியா எந்தத் திசையில் அமைந்துள்ளதென்பது தெரியாதவர்கள் இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களை ஒருபோதும் அரசாங்கம் வெளியேற்றப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைப்பு காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மனிதாபிமான மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றங்களின் முன் ஆஜர்படுத்த முயற்சி;க்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற வட பகுதியின் நிலைமைகளை நேரில் வந்து பார்வையிடுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு தாம் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply