முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றத்துக்கு இராணுவம் தடை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை அந்தப் பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதற்கு முயற்சி எடுக்கவேண்டாம் என்று முல்லைத்தீவு அரச அதிபருக்கு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அவர் அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, அம்பலவன் பொக்கணை ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் 20 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான அமைந்துள்ளன. இங்கு முன்னர் 5300 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. இறுதி யுத்தம் நடைபெற்றபோது இந்தப் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள இக்குடும்பங்களை அந்தப் பகுதியில் மீளக்குடியமர்த்துவதற்கு இராணுவம் அனுமதி வழங்க மறுத்துள்ளதுடன். அந்த மக்களை அந்த இடங்களில் குடியேற்ற முயற்சி எடுக்க வேண்டாம் என முல்லைத்தீவு அரச அதிபருக்கு
2011 மார்ச் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு அரசாங்க அதிபரை சந்தித்த கேணல் தர அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக அறியப்படுகின்றது.

இந்தப் பகுதியானது, மக்களின் குடிமனைகளையும் அவர்களின் வாழ்வாதாரமான கடற்றொழிலை உள்ளடக்கிய சாலை, மாத்தளன் போன்ற கடற்கரைகளையும் உள்ளடக்கிய பிரதேசமாகும்.
திருகோணமலையின் சம்பூர் கிராமத்தில் 10,000 ஏக்கர் நிலப்பரப்பை கைப்பற்றியுள்ள இலங்கை பாதுகாப்புத்துறை மன்னாரில் முள்ளிக்குளம், சன்னார் போன்ற பிரதேசங்களையும், ஏ-9 வீதியில் பாரிய நிலப்பரப்புக்களையும் தனது தேவைகளுக்காக எடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு என்ற இடத்தில் இருக்கக்கூடிய வயல் நிலங்கள், குடிமனைகள் உள்ளடங்கலாக ஏறத்தாழ 2500 ஏக்கர் நிலப்பரப்பை ஏற்கனவே இராணுவம் கைப்பற்றி அந்த மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. அந்த மக்களுக்கு வாழ்விடமும் கிடையாது,

வாழ்வாதாரத்திற்கான வயல் நிலமும் கிடையாது.
வடக்கு-கிழக்கை இராணுவ மயப்படுத்தல், சிங்கள பௌத்த மயப்படுத்தல் என்ற இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இவை நடைபெற்று வருகின்றது. சம்பூர், முள்ளிக்குளம், கேப்பாப்புலவு, சன்னார், திருமுறிகண்டி மக்களின் வரிசையில் இன்று முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் நடு வீதிக்கு விரட்டப்பட்டுள்ளனர்.

போரினால் இடம்பெயர்ந்த மக்களை மிக விரைவாக மீள் குடியேற்றம் செய்கின்றோம் என்று சர்வதேச ரீதியில் பிரசாரம் செய்து வருகின்ற இலங்கை அரசு, எத்தனை ஆயிரம் மக்களின் மீள்குடியேற்றத்தை மறுத்துள்ளது என்பதை சிங்கள மக்களும் சர்வதேச சமூகமும் புரிந்துக் கொள்ள வேண்டும். அது மாத்திரமல்லாமல் இம்மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேற அனுமதிக்கும் படி இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை கோருகின்றோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply