வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கு இலங்கை முனைப்பு காட்டியது : விக்கலீக்ஸ்
இறுதிக் கட்ட யுத்தத்தின் உண்மைக் கள நிலவரங்கள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் போதிய தெளிவு இருக்கவில்லை என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.2009ம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் ஆகியோர் இறுதிக் கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறெனினும், பாரியளவு பொதுமக்கள் உயிரிழப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளதாக அமெரிக்க தூதரகத் தகவல்களை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இரு தரப்பு ராஜதந்திர வழிமுறைகளை பயன்படுத்த முடியும் என சிவ் சங்கர் மேனன், அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மற்றும் பாதுகாப்புப் பேரவை அழுத்தங்களை விடவும் இரு தரப்பு ராஜதந்திர அழுத்தங்கள் வலுவானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, சீனா, மேற்குலக நாடுகள் ஆகியன இணைந்து இலங்கை விவகாரத்தில் தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக 13ம் அரசியல் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி இந்தியாவிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply