மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய ஜயலத் நாளை தமிழகம் விஜயம்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தமிழகத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் அமைப்புக்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன நாளை செவ்வாய்க்கிழமை தமிழகத்திற்கு விஜயத்தை மேற்கொள்கிறார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே இவ்விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விஜயம் தொடர்பாக டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி.கருத்து தெரிவிக்கையில் நாளுக்கு நாள் மீனவர் பிரச்சினை சிக்கலாகிக் கொண்டே போகின்றது. எனவே நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது கடப்பாடாகும்.

எனவே தமிழகத்திற்கு விஜயத்தை மேற்கொள்கின்றேன். அங்கு அரச துறை அதிகாரிகள் மீனவர் அமைப்புக்கள் மற்றும் கத்தோலிக்க மதகுருமாரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளேன். இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் ரோலர்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் எமது மீன்வளம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்படும். சர்வதேச கடல் சார் உடன்படிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டியது அவசியமாகும். தேசிய சர்வதேச ரீதியில் எழுந்துள்ள இப்பிரச்சினையை நட்புறவுடன் தீர்ப்பதற்காக எதிர்க்கட்சி என்ற ரீதியில் எமது பங்களிப்பை வழங்குவோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply