எஞ்சிய உள்ளூராட்சி சபைகளையும் ஐ.ம.சு. முன்னணியே கைப்பற்றும்

தேர்தல் நடைபெறவுள்ள ஏனைய உள்ளூராட்சிச் சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றுமென கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர், 205 சபைகளில் அரசாங்கம் வெற்றிபெற்ற போதும் 212 உள்ளூராட்சிச் சபைத் தலைவர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை சகல கட்சிகளும் அரசாங்கத்துடனேயே இருப்பதை உறுதி செய்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலில் 141 பேரே அரசாங்கத்தின் சார்பில் தெரிவான போதும் பின்னர் அத்தொகை 161 ஆக அதிகரித்தது. அதேபோன்று உள்ளூராட்சிச் சபைத் தேர்தலிலும் 205 இப்போதே 212 ஆக உயர்ந்துவிட்டது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவைத் தவிர வடக்கு, கிழக்கு, மலையகம் என 22 மாவட்டங்களிலும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெற்றுள்ளது. வடக்கு, கிழக்கிலும் எமது பிரதிநிதிகள் இம்முறை பிரதேச சபைத் தலைவர்களாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

அதேபோன்று மன்னாரில் எமது முன்னணி 49 வீதத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 45 வீதத்தையும் பெற்றுள்ளதுடன் ஐ.தே.க. 4 வீத வெற்றி யையே பெற முடிந்துள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள ஏனைய உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிவெறுவது உறுதி. அரசாங்கத்துடன் இணைந்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் அரசாங்கத்தினதும் நியதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதனை மீறி செயற்படுபவர் களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த நேரும்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி உட்பட சகல கட்சிகளும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் வெற்றிபெற்று அச்சபைகளிலும் அரசாங்கத் துடனேயே இணைந்துள்ளன.

அதனால் 212 உள்ளூராட்சிச் சபைத் தலைவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னி லையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டையடுத்து சகல உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களுக்கு மான பயிற்சிகளை வழங்கவும் அதனூடாக அபிவிருத்தியை வெற்றிகரமாக முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply