சிரியாவில் ஆர்ப்பாட்டம் உக்கிரம் : அமைச்சரவை ராஜினாமா

சிரியாவில் அரசுக்கெதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சரவை பதவி விலகியுள்ளது. இதனை அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல்- அஸாட் உறுதிபடுத்தியுள்ளார். பஷார் அல்-அஸாட் கடந்த 11 வருடங்களாக சிரியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தவராவார். இந்நிலையில் அங்கு சீர்திருத்தத்தைக் கோரி மக்கள் கடந்த சில வாரங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்தே அந்நாட்டு அமைச்சரவை நேற்று பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 1963 ஆம் ஆண்டு முதல் அங்கு அமுலில் இருந்து வரும் அவசரகால நிலையும் ரத்துச் செய்யப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply