முன்னாள் போராளிகள் 205 பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்
புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 206 பேர் நாளை விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.205 ஆண் போராளிகளும் ஒரு பெண் போராளியுமே இவ்வாறு பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலை செய்யப்படவுள்ளவர்கள் வவுனியா நெலுக்குளம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றவர்களாவர். முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வு நாளை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிரி கஜதீர நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டும் மேலுமொரு தொகுதி முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply