வவுனியா பாரதிபுரத்தில் இளம்பெண் கடத்தப்பட்டார்

வவுனியா பாரதிபுரத்தில் உறவினர்கள் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற இனந்தெரியாதவர்களினால் இளம்பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்திருக்கின்றார். பட்டப்பகல் வேளையில் நடைபெற்ற இந்தக் கடத்தல் சம்பவத்தினால் பாரதிபுரம் கிராமம் உட்பட அந்தப் பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட பெண் இருந்த வீட்டிற்கு வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வவுனியா பாரதிபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி ரேணுகாதேவி (28) என்ற இளம்பெண்ணே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிலையத்தில் கடத்தப்பட்டவரின் தாயார் முறையிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply