‘கிரடிட் ரேட்டிங்’- இலங்கை முன்னேற்றம்
மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ் நாடொன்றுக்கு, அது வாங்குகின்ற கடனை திருப்பிச் செலுத்தும் வல்லமை எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை ஆராய்கின்ற ‘க்ரடிட் ரேட்டிங்’ எனும் கடன் பெறுவதற்கான அந்தஸ்த்தை தரப்படுத்தும் சர்வதேச இரண்டு முன்னணி முகவர் நிறுவனங்களே, இலங்கை தொடர்பில் சாதகமான சான்றிதழ்களைக் கொடுத்துள்ளன.
மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ் மற்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், இலங்கையில் செய்யப்படக்கூடிய முதலீடுகள் விடயத்தில் அச்சுறுத்தல் குறைந்த சூழ்நிலையே அங்கு நிலவுகின்றது என்கின்ற ரீதியில் அந்நாட்டின் பொருளாதாரம் போதுமான அளவுக்கு பலமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளன.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொடருகின்ற வளர்ச்சி பற்றியும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் அங்கு ஒட்டுமொத்த பொருளாதார காரணிகளில் ஏற்பட்டுவரும் ஸ்திரத்தன்மை பற்றியும் இரண்டு தரப்படுத்தும் நிறுவனங்களும் திருப்தி தெரிவித்திருக்கின்றன.
இலங்கையில் பல தசாப்தங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அனுசரணை செயற்திட்டம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்தளவுக்கு அச்சமின்றி தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் என்ற அரசியல் சூழ்நிலையை கணக்கில் எடுக்கும் ஆய்வில், இலங்கை ஸ்த்திரம் என்ற அளவிலிருந்து சாதகம் என்ற அளவுக்கு முன்னேறியிருப்பதாக மூடிஸ் இன்வெஸ்ட்டர்ஸ் சேர்விஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஆடை ஏற்றுமதி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய காரணி என சுட்டிக்காட்டியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், இலங்கையின் வருமான வரித்துறையில் ஏற்பட்டிருந்த துண்டுவிழும் தொகை படிப்படியாக குறைந்து வருகின்றமை பாராட்டப்படக்கூடிய விடயம் எனக்கூறியுள்ளது.
சர்வதேச கடன் பத்திரங்களை விற்பதன் மூலம் பில்லியன் கணக்கான டொலர்களை ஈட்டுவதற்கு இலங்கைத் தயாராகி வருகின்ற நிலையில், அந்நாட்டுக்குச் சாதகமாக இந்த புதிய தரப்படுத்தல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply