ஆயிரக்கணக்கானோருக்கு வாக்களிக்கும் உரிமை மீறப்படலாம்: கபே
பாரியளவில் சேதமடைந்து காணப்படும் வீதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையின் குறைபாடு போன்ற காரணங்களினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களின் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மீறப்படலாம் என கபே அமைப்பு அறிவித்துள்ளது.மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சி தலைவர்களுக்குமிடையே கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மிகவும் மோசமான வீதிகளை கொண்ட இப் பிரதேசங்களில் போதியளவு பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடாததோடு, புதிதாக மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்திற்கென குறைந்தது ஒரு ட்ரக்டரேனும் இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல பல கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்க வேண்டியுள்ளதுடன், கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையங்கள் இரண்டிற்கிடையேயான தூரம் 5 கிலோ மீற்றருக்கும் அதிகமாகக் காணப்படுகின்றது.
மேலும், முன்னைய தேர்தல்களின்போதும் போக்குவரத்து சேவையின் குறைபாட்டால் பெரும்பாலான மக்கள் வாக்களிக்க தவறியிருந்தமையை கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply