“ஆப்கனும் அமெரிக்காவும் தோற்றுவிட்டன’ : அதிபர் ஹமீத் கர்சாய் ஒப்புதல்

 “ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்கா தலைமையிலான “நேட்டோ’ படைகளும், ஆப்கனில் அமைதியை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்துவிட்டன. பாகிஸ்தான் இல்லாமல், ஆப்கனில் தலிபான்கள் ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது’ என, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.ஆப்கனில், அமெரிக்கப் படைகள் நுழைந்து, 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

அதிபர் ஹமீத் கர்சாய் இதுகுறித்து, கூறியதாவது: ஆப்கன் அரசும், அமெரிக்கா தலைமையிலான “நேட்டோ’ படைகளும், ஆப்கனில் அமைதியைக் கொண்டு வருவதில் தோல்வி அடைந்துவிட்டன. ஆப்கன் மீதான பாகிஸ்தானின் கொள்கையும், தலிபான்கள் மீதான கொள்கையும் ஒன்று போலத் தான் இருக்கிறது. தலிபான்கள், பல்வேறு தாக்குதல்களை ஆப்கனில் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான மேலிட உத்தரவுகள் எல்லாம், வெளியில் இருந்து வருகின்றன. பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல், தலிபான்களால் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது. வரும் 2014க்குப் பின், நான் அதிபர் பதவியில் தொடரமாட்டேன். எனக்கு அடுத்து, அப்பதவியில் அமரப் போகிறவரை, நான் இப்போதே தேட ஆரம்பித்து விட்டேன். இவ்வாறு, கர்சாய் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply