பிரித்தானியாவில் கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு

பிரித்தானியாவில் திடீரென சில கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு கல்லூரிகள் இவ்வாறு திடீரென மூடப்பட்டதாகவும் இதனால் இலங்கையைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தளத்திற்கு எதிரில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியுள்ளனர்.

கல்வியைத் தொடர்வதற்கு தேவையான வீசா ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு பிரதமரிடம் மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் பிரதமரின் பெயருக்கு எழுதப்பட்ட மனுவொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் குறித்த மாணவர்களின் வீசாக்கள் தன்னிச்சையாகவே ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அதிகாரிகளிடமும் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர்.

வெளிநாட்டு மாணவர்கள் வாரமொன்றில் பத்து மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற புதிய நிபந்தனை மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மாணவர் வீசாவில் லண்டன் சென்ற பலர் 1.5 மில்லியன் ரூபாவிற்கு மேல் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், மூடப்பட்ட கல்லூரிகளிலிருந்து கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏழு கல்லூரிகள் மூடப்பட்ட காரணத்தினால் 400 இலங்கை மாணவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply