முல்லேரியா சூட்டுச் சம்பவம்: 12 பிஸ்டல்கள், 02 ரி.56 , 02 ரிவோல்வர்கள் மீட்பு

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரென கருதப்படும் ஒருவர் நேற்றுமாலை ஆயுதங்களுடன் சீ.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேகநபரிடமிருந்து 12 பிஸ்டல்கள், 02 ரிவோல்வர், 02 ரி-56 ரக துப்பாக்கி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டி ருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சீ.ஐ.டி.யினர் இரு குழுக்களின் கீழ் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான 37 பேரிடம் விரிவான விசாரணைகள் நடத்திய சி.ஐ.டி.யினர், பிரதான சந்தேக நபரென சந்தேகிக்கப்படும் ஒருவரை நேற்று மாலை கைதுசெய்தனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன் னாள் எம்.பி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்திருப்பதுடன் துமிந்த சில்வா எம்.பி. படுகாயமடைந்த நிலையில் ஜயவர்த்தனபுர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனின் பணிப்புரையின் பேரில் சீ.ஐ.டி.யினர் விரிவான விசாரணைகளை ஆரம் பித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply