சர்வதேச புலி ஆதரவாளருக்கு தேர்தலில் சிறந்த பதில் : மைத்திரிபால சிறிசேன

இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும், அமைப்புகளுக்கும் இலங்கை மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் சிறந்த பதிலை வழங்கியுள்ளனர். இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான நேற்றுத் தெரிவித்தார்.கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையை இந்நாட்டு மக்கள் நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வழங்கியுள்ளனர்.
மாநகரசபைகளின் அதிகாரங்களை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இருந்தபோதிலும், கொழும்பு மாநகரசபை அதிகாரத்தை மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியால் கைப்பற்ற முடிந்தது. எனினும், கொழும்பு மாநகரசபையை இழந்துவிட்டது அரசு. அந்த மாநகரசபை காலம்காலமாக ஐக்கிய தேசியக் கட்சி வசமே இருந்துவந்தது. குறிப்பாக 56 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி வசமிருந்துவந்த கண்டி மாநகரசபை மற்றும் 40 வருடமாக ஐக்கிய தேசியக் கட்சி வசமிருந்த நுவரெலியா மாநகரசபை என்பவற்றின் அதிகாரம் இன்று அரசுக்குக் கிடைத்திருக்கிறது.

அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சி வசமிருந்த தெஹிவளை கல்கிஸை மாநகரசபையின் அதிகாரமும் அரசு வசமாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கோபுரங்கள் இன்று உடைந்து சின்னாபின்னமாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களான டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ ஆகியோர் கட்டிக்காத்த ஐ.தே.கவின் சொத்துகள் அனைத்தும் இன்று கரைந்து போயுள்ளன.கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றிவிட்ட ஐக்கிய தேசியக் கட்சி அடுத்தகட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது எனக் கூறியுள்ளது. இது கேலிக்குரிய விடயமாகும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply