ஏ.ஜே.எம். முஸம்மில் மேயராக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையை கைப்பற்றியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சபையின் மேயராக பெயரிடப்படுவதாக நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதேவேளை பிரதி மேயராக டைட்டஸ் பெரேராவை கட்சி அறிவித்திருக்கின்றது. நடந்த முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையென வர்ணிக்கப்படுவதுமான கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தது.

ஏனைய 22 சபைகளிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இந்நிலையில் மேயர் மற்றும் பிரதி மேயரை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கட்சியின் அறிவிப்பினை விடுத்ததுடன் கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்ற உறுப்பினர்களையும் சந்தித்தார்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சச்சிதானந்தன் மேல் மாகாண சபை உறுப்பினர் சி.வை.பி. ராம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply