தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் : சீ.பீ.ஐ.
தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கைத் தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் மற்றும் யுத்த வலயத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுத்தல் ஆகியன தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் ராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 20ம் பேராளார் மாநாட்டில் இலங்கைத் தமிழர் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கிற்கு அதிகார பகிர்வினை வழங்கக் கூடிய வகையில் அரசியல் தீர்வுத் திட்டமென்று முன்வைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சகல ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply