அழகியற் கற்கைகள் நுண்கலை பீட மாணவர்கள் தொடர்ந்தும் வகுப்பு பகிஷ்கரிப்பில்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நுண்கலை பீடத்தின் மாணவர்கள் தொடர்ந்தும் தமது வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது கோரிக்கைகளுக்கு உறுதியான பதில் வழங்கப்படும் வரைக்கும் தாம் வகுப்புக்களை தொடர்ந்து பகிஷ்கரிக்கப் போவதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நுண்கலை பீடத்தின் மாணவர்கள் ஒன்றியத்தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலையும் மாணவர்கள் வகுப்புக்களுக்கு செல்லாமல் தமது எதிர்ப்தை தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வளாகத்தின் கதவுகள் மாணவர்களால் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்த போதும் வளாகத்தின் பணிப்பாளர் கலாநிதி பிரேம்குமார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பிரதான வாயில் மற்றும் ஒன்றுகூடல் மண்டபம் என்பனவற்றை திறக்க அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகள் உரிய தரப்பினருக்கு அறிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பு பகிஷ்கரிக்கு செய்து அடையாள ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலும் இதுவரையில் தமது கோரிக்கை குறித்து எதுவித உத்தரவாதங்களும் தரப்படவில்லையெனவும் மாணவர்கள் ஒன்றியத் தலைவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரையில் வகுப்புகளுக்கு செல்வதில்லையென மாணவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நுண்கலை பீடத்தின் மாணவர்கள் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது நிறுவகத்தின் பழைய நிர்வாகத்தினர் மாணவர்களது வேண்டுகோள்களை நிறைவேற்றுவதில் மந்தகதியிலேயே செயற்பட்டு வருகின்றனர். இதன் போது எமது கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் பெற்றதும் எமது பல கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பல்வேறு சீரமைப்பு பணிகளையும், அபிவிருத்தியையும் மேற்கொண்டு வருகின்றார். இதற்காக எமது மாணவர் ஒன்றியம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

இதேபோன்று எமது கோரிக்கையாகவுள்ள சிரேஷ்ட உதவி பதிவாளர், சிரேஸ்ட நிதியாளர் ஆகியோரையும் இடமாற்ற உபவேந்தர், எமது நிறுவகத்தின் பணிப்பாளர், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர், கௌரவ உயர்கல்வி அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply