சனல் 4 தயாரித்த இலங்கையின் கொலைக்களங்களுக்கு இரண்டு விருதுகள்

பிரித்தானியாவின் One World Media awards எனப்படும் புகழ்பெற்ற ஊடக விருது விழாவில், பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.

இந்த விழாவில், இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சிக்கான விருதையும், சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் வென்றுள்ளது.

இந்த விருதுகளைத் தெரிவு செய்த இரு நடுவர்களும் சனல் 4 தொலைக்காட்சி துணிச்சல் மிக்கதும் அசாதாரணமானதுமான முயற்சியை பாராட்டியுள்ளனர்.

கண்டிப்பாக பதிலளிக்கப்பட வேண்டிய கொடூரங்களை சனல்4 தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும், இந்த ஆவணப்படம் மூலம் இந்தக் கொடூரங்கள் அனைத்துலக கவனத்தை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply