மனநிலை பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பெண் பயங்கரவாத தடைச்சட்டத்திலிருந்து விடுதலை

போர் பகுதியான பூநகரிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரை எதிர்த்து போரிட்டார் என சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்ணெருவர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதனினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நடராஜா ராஜேஸ்வரி என்ற பெண்னே யாழ்.மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவராவர்.

குறித்த பெண் 2008 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் குறித்த பெண்ணின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தமையினால் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து குறித்த பெண் யாழ்.மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply