மே 18ஆம் திகதி சென்னை இலங்கை இணைத்தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
இலங்கையில் சிவாலயங்கள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்வரும் மே 18ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை இணைத்தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் போராட்டத்தில் சிவனடியார்கள் பங்கேற்பர் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலினை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மசூதி இடித்ததற்கு குரல் கொடுத்த கட்சிகள் இது குறித்து எந்த கட்சிகளும் குரல் கொடுக்கவில்லை.
எனவே சென்னை இலங்கை இணைத்தூதரகம் முன்பு வருகிற மே 18ஆம் திகதி சிவனடியார்கள் பங்கேற்கும் போராட்டம் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply