தேர்தல் பிரச்சாரம் ? ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஒபாமா ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது முந்தைய நிலையை மாற்றிக்கொண்டு ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு இப்போது ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வாண்டு இறுதியில் நடக்கிறது. ஜனநாயக கட்சி வேட்பாளராக ஒபாமாவே மீண்டும் போட்டியிடுகிறார்.
குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி அறிவிக்கப்பட்டுள்ளார். இருவரும் பல்வேறு மாகாணங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகின்றனர்.
அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்கள், தங்களது திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என கோரி வருகின்றனர். ஒரே பாலினத்தினர் திருமணம் செய்து கொள்ளும் முறையை ஜனாதிபதியான இருந்தே ஒபாமா எதிர்த்து வந்துள்ளார்.
அதே போல எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளரான மிட்ரோம்னியும் இந்த திருமணத்தை அங்கீகரிக்க கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கூட, அவர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த நிலையில்இ ஒபாமா தனது முந்தைய நிலையை மாற்றிக்கொண்டுஇஒரே பாலினத்தினர் திருமணம் செய்து கொள்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பி.பி.சி. செய்து நிறுவனத்துக்கு ஒபாமா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒரே பாலினஜோடியினர் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) நிச்சயமாக திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் எனது கருத்தை தெரிவிப்பது அவசியம் என்று கருதுகிறேன். திருமணம் என்பது சமூகம், மதம் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த விஷயமாக இருப்பினும், சம்பந்தப்பட்டவர்களின் (திருமண ஜோடி) உரிமைகளும் இதில் அடங்கி இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
சட்டத்தினால் தடுக்க முடியாததை குழந்தைகளை நல்வழிப்படுத்துவதன் மூலம் சாதித்து காட்ட முடியும் எனது மனைவிக்கு நல்ல கணவனாகவும்இகுழந்தைகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருப்பதால்இசிறந்த அதிபராக திகழ்ந்து வருகிறேன். மீண்டும் அதிபராக தேர்ந்து எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஒபாமா கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply