ஜெயல‌லிதாவுக்கு கொலை மிரட்டல்: உஷார் நிலையில் பொலிஸார்

தமிழக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதாவுக்கு ஈமெயிலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை  மதுரை ‌மீனா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோ‌யிலு‌க்கு வெடிகு‌ண்டு ‌மிர‌ட்ட‌ல் வ‌ந்ததையடு‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் உஷா‌ர் படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

சென்னை போயஸ் கார்ட‌னி‌ல் உ‌ள்ள முத‌‌ல்வ‌ர் ஜெயல‌லிதா வெடிகு‌ண்டு மூல‌ம் கொலை செ‌ய்வோ‌ம் எ‌ன்று மாவோ‌‌யி‌ஸ்‌ட் முகமது ஜா‌ன் எ‌ன்ற பெய‌ரி‌ல்  ஈமெயிலில் மூல‌ம்  மிரட்ட‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

மேலு‌ம், மதுரை  மீனாட்சி  அம்மன்  கோயில்இதிருவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோயில்  ஆகியவற்றில்  வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக  அ‌ந்த ‌மிர‌ட்ட‌ல் மெ‌யி‌‌லி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இதனால் உஷா‌ர் அடைந்தத பொலிஸா‌ர், போயஸ்  தோட்டத்தில்  வெடிகுண்டு ‌நிபுண‌ர்களு‌ட‌ன் சோதனை‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர். சோதனை முடி‌வி‌ல் அது வெறு‌ம் புர‌ளி எ‌ன்று தெ‌ரியவ‌ந்தது.

மகாராஷ்டிராவில்  இருந்து வ‌ந்த  இ‌ந்த இமெ‌யி‌ல் வ‌ந்து‌ள்ளதாக எ‌‌ஸ்.‌பி.‌சி.ஐ.டி பொலிஸா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இ‌த‌‌னிடையே முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலும் மதுரை  மீனாட்சி  அம்மன் கோயில்இதிருவில்லிபுத்தூர்  ஆண்டாள்  கோயிலு‌க்கு‌ம் பாதுகா‌ப்பு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply