முறையான திட்டத்துடன் அமெரிக்கா வர வேண்டும்! பீரிஸூக்கு ஆலோசனை

மீளமைப்பு தொடர்பிலான முறையான திட்டம் ஒன்றுடன் இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா வர வேண்டும் என, அமெரிக்காவின் பராக் ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

ராஜாங்க செயலாளர் ஹிலரிகிளின்டனின் அழைப்பின் அடிப்படையில் அவர் விஜயம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ராஜாங்க தினைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது பதில் வழங்கிய ராஜாங்க தினைக்கள பேச்சாளர் விக்டோரியா நியுலேண்ட், மீள்நிர்மானம் மற்றும் புனர்வாழ்வளிப்பு தொடர்பில் இலங்கையின் முழுமையான செயற்திட்டத்தை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை மீளமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அமெரிக்கா தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply