பிலிப்பைன்ஸுக்கு செல்ல வேண்டாம்! தமது பிரஜைகளுக்கு சீனா எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் உள்ள தமது நாட்டுப் பிரதிநிதிகளை பாதுகாப்பாக இருக்குமாறு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பிலிப்பைன்ஸுக்கு பயணம் மேற்கொள்வதற்கும் சீனா தமது நாட்டுப் பிரஜைகளுக்கு தடை விதித்துள்ளது.

சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிலிப்பைன்ஸில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ள நிலையில் சீனாவின் இந்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சீனாவின் தெற்கு கடற்பரப்புக் குறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

பிலிப்பைன்ஸின் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று தமது பிரைஜகளுக்கு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply