நோர்வே நாடாளுமன்றத்தில் இலங்கை பற்றி உரையாற்ற தயாராகும் சுரேஸ்

யுத்தத்திற்கு பின்னரான இலங்கை என்ற தலைப்பில், நோர்வே நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உரையாற்ற உள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நோர்வே நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் போது இலங்கைக்கான விசேட பிரதிநிதி எரிக் சொய்ஹேமும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு நோர்வே நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் மரிட் நைபாக்கின் தலைமையின் கீழ் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நோர்வே நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் என நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply