அந்நிய செலவாணி சட்டத்தை மீறினார் – ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு 29ஆம் திகதி

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிடட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அமெரிக்கா நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோடிஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்னத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட சில மில்லியன் டொலர்களை அந்நிய செலாவணி சட்டத்தை மீறி, இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் வைப்பிலிட உதவியாக ரவி கருணாநாயக்க உள்ளிடட மூவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் அடுத்த வழக்கு விசாரணையின் போது ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜ் ராஜரட்னம் அனுப்பிய பத்து லட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட்டதன் மூலம் நாட்டின் அந்நிய செலவாணி சட்டத்தை மீறியுள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply